states

img

இமாச்சல் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

இமாச்சல் பிரதேசத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இமாச்சல் பிரதேச தலைநகர் சிம்லாவில் புதனன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது. இதுகுறித்து தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளதாவது, இன்று காலை 9.58 மணியளவில் பூமிக்கு அடியில் 7 கி.மீ ஆழத்தில் இந்த மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் சிம்லாவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.